மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்

'மஹிந்திரா' நிறுவனம், 'பி.இ., 6' மின்சார எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், தற்போது வாடகை பேட்டரி முறையில் 11.45 லட்சம் ரூபாயில் வந்துள்ளது. இத்திட்டத்தில், ஒரு கி.மீ., ருக்கு 3.75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரியர் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த காரில், ஏற்கனவே 59 மற்றும் 79 கி.வாட்.ஹார்., பேட்டரிகள் இருந்த நிலையில், தற்போது 70 கி.வாட்.ஹார்., பேட்டரியிலும் கிடைக்கிறது. முழு சார்ஜில், 548 கி.மீ., முதல் 683 கி.மீ., வரை பயணிக்க முடியும். பேட்டரி வகையை பொறுத்து காரின் பவர் மாறுபடுகிறது. உயர் ரக பேட்டரி காரில், 100 கி.மீ., வேகத்தை எட்ட 6.4 வினாடி எடுகிறது.
Latest Tamil News
இந்த பேட்டரியை 140 கி.வாட்., பாஸ்ட் சார்ஜர் வாயிலாக முழு சார்ஜ் செய்ய, 20 நிமிடம் எடுக்கிறது. பேட்டரி சார்ஜ் முழுமையாக முடிந்தாலும், கூடுதலாக 24 கி.மீ., பயணிக்க 'ரிவைவ் மற்றும் ரிவைவ் எஸ்.ஒ.எஸ்.,' என இரு மோட்கள் வந்துள்ளன. 'ரிவைவ் எஸ்.ஓ.எஸ்.,' மோட், ஐந்து முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

12.3 அங்குல மூன்று டிஸ்ப்ளே கொண்ட டேஷ் போர்டு, 19 அங்குல அலாய் சக்கரங்கள், 540 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் வசதி, 7 காற்று பைகள், கூகுள் ஜெமினி ஏ.ஐ., வாயிலாக காருடன் பேசி எந்த தகவலையும் தெரிந்து கொள்ளும் வசதி, ஐந்து ரைட் மோடுகள், 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பேனரோமிக் சன் ரூப், டெயில் லைட்டை டிஜிட்டல் தகவல் பலகையாக மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கார், 12 நிறங்களில் கிடைக்கிறது.

Advertisement