பெயின்டரை கத்தியால் வெட்டிய இளைஞர் கைது

கே.கே.நகர்:அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக்கேட்ட பெயின்டரை, நண்பர்களுடன் வந்து கத்தியால் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகர் விஜயராகவபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 23; பெயின்டர். கடந்த 17ம் தேதி இரவு அங்கு நின்றிருந்தார். அப்போது, பைக்கில் அதிவேகமாக வந்த சரண்ராஜ், 19, என்பவரை மெதுவாக செல்லுமாறு தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

பின், சரண்ராஜ் நண்பர்களுடன் மது போதையில் மீண்டும் வந்து சாமுவேலிடம் தகராறில் ஈடுபட்டு, சிறிய கத்தியால் அவரது இடது கை மற்றும் விலா பகுதியில் வெட்டினார். காயமடைந்த சாமுவேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின்படி, சரண்ராஜை கே.கே.நகர் போலீசார் எப்போது? கைது செய்தனர்.

கிரைம் கார்னர்

தலைமறைவு குற்றவாளி கைது

ஐஸ்ஹவுஸ்: ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், 2014ம் ஆண்டு பதிவான திருட்டு வழக்கில், ராயப்பேட்டையைச் சேர்ந்த விமல்நாதன், 35 என்பவரை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானார். நேற்று விமல்நாதனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

***

போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

ஜாம்பஜார்: ஜாம்பஜார் போலீசார் நேற்று மாலை, கம்மம் தர்வாஜா தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாலிபர் ஒருவரிடம் விசாரித்தனர். அதில், முகமது சுபைர், 21, என்பதும், மும்பையிலிருந்து போதை மாத்திரை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement