எண்கள் சொல்லும் செய்தி


6


நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் உற்பத்தி துறை வளர்ச்சி தரவுகள் வெளியாக உள்ள நிலையில், அது 6 சதவீதமாக குறையும் என இக்ரா கூறியுள்ளது

5,500




சர்க்கரையின் ஆலை கொள்முதல் விலை, நேற்று குவின்டாலுக்கு 5,500 ரூபாயாக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அக்., 1ல் துவங்கும் 2026 - 27 சர்க்கரை பருவத்தில் கையிருப்பு குறையும் என்ற தகவலே இதற்கு காரணம்

2,579


நாட்டின் பங்குச்சந்தைகள் சரிவால், விலை குறைந்துள்ள பங்குகளில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்களன்று ஒரே நாளில் ரூ.2,579 கோடி முதலீடு

18,000


வெளிநாட்டு கரன்சி பரிமாற்ற கெடுவை செப்.30ல் இருந்து ஆக. 31 என ஆர்.பி.ஐ., குறைத்த நிலையில், அதற்குள் ரூ.18,000 கோடியை திரட்ட வங்கிகள் கடும் போட்டியில் இறங்கியுள்ளன


6

லேபிள்கள், விளம்பரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய பிறகு, டாபர் இந்தியா உள்ளிட்ட
6 நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரிசெய்துள்ளதாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement