கிளினிக்கின் பூட்டை உடைத்து ரூ.25,000 திருட்டு

திருப்போரூர்: தாழம்பூரில் தனியார் கிளினிக்கின் பூட்டை உடைத்து 25,000 ரூபாய் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேளம்பாக்கம் அருகே தாழம்பூர் பகுதியில் மருத்துவர் முகமது ஹாசிக், 50, என்பவர் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார்.

இவர் இருதினங்களுக்கு முன் இரவு, வழக்கம்போல் சிகிச்சை முடித்து கிளினிக்கை பூட்டி விட்டு சென்றார்.

பின் நேற்று காலை கிளினிக்கை திறப்பதற்காக வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, கிளினிக்கில் இருந்த 25,000 ரூபாய் மற்றும் ஒரு சாம்சங் டேபலட் திருடு போனது தெரியவந்தது.

தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement