சர்வதேச மனித உரிமைகள் அறக்கட்டளை தலைமை இயக்குநராக கிருஷ்ணன் தேர்வு

கூடுவாஞ்சேரி: சர்வதேச மனித உரிமைகள் அறக்கட்டளைக்கு, தமிழ்நாட்டின் தலைமை இயக்குநராக, ஊரப்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அறக்கட்டளை, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு, சட்ட அமலாக்க துறைகள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைமை பொறுப்பிற்கு, 11 நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணன், 79, என்பவர் மாநில மூத்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தவிர, மாநில இயக்குநராக ரவி, மாநில தலைவராக ராஜேந்திரன் உட்பட மேலும் எட்டு பேர், மாநில பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், 2028ம் ஆண்டு, ஆக., மாதம் வரை இந்தப் பதவியில் தொடர்வார்கள் என, டெல்லி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

Advertisement