அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். ஒரு உதவியாளர் நியமித்து கொள்ளலாம் என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது:
* வாகனத்திற்கு டிரைவர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப் படியாக வழங்கப்படும்.
* அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000/-உதவியாளர் படியாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தற்போது முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.
பல்வேறு முக்கிய அறிவிப்புகள்!
சட்டசபையில் விதி 110ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு:
* ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும்; இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு 30 கோடி ரூபாயும், ஒரு ஆண்டிற்கு 360 கோடி ரூபாயும் செலவாகும். 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வால் பயன் பெறுவார்கள்.
* சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பில் 400 படுக்கைகளுடன் மருத்துவமனை அமைக்கப்படும்; முதல்வரின் மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
* திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையமும் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
@block_Y@
இது குறித்து சட்டசபையில், காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி பேசியதாவது: சட்டசபையில் இருக்கின்ற அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பயன்படுமாறு வாகனங்களையும், உதவியாளரையும் வழங்கிய முதல்வர் விஜய்க்கும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.block_Y
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் அறிவித்த முக்கிய அறிவிப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை அறிவிப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கருத்து சொல்லுங்கள் வாசகர்களே!
தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கார், பராமரிப்புக்கு மாதம் ரூ. 75 ஆயிரம், உதவியாளருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு பற்றி உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!
வெட்டி செலவு. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்றும் இன்னும் பண பலன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். பள்ளி கட்டிடங்கள் பாழ் பட்டு கிடைக்கின்றன. குடிநீர் வசதி இல்லை. நிறைய பெண்கள் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை.
How thoughtless. What a waste of public money . Which MLA is poor , which MLA doesn’t have a car.
அவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என்று இத்தனையும்? பொது போக்குவரத்து அந்த அழகில் உள்ளது என்று அவர்களுக்கே தெரிந்துள்ளது.
தேவை இல்லாத ஒன்று .வர்ஷா வருஷம் 28 கோடி செலவு ..௫ 140 கோடி அவுட். பேசாம எலக்ட்ரிக் கார் கொடுப்பது செலவை kuraikum
ஆஹா ..ஆஹா ...இதுவல்லவோ அரசு ...நிர்வாகத்தன்மை ...
அமைச்சர்கள் ..மற்றும் MLA களும் ...சந்தோசமா இருந்தால்தானே ...மக்களுக்கு உதவி செய்ய மனம் வரும்..
அப்போதுதான் அமைச்சர்கள் ..மற்றும் MLA களும் லஞ்சம் வாங்க மாட்டார்கள் ...ஊழல் செய்ய மாட்டார்கள் ..அவர்கள் மனமும் குளிரவேண்டும் ...மக்கள் மனமும் குளிரவேண்டும் ...
தளபதி அவர்களின் நிர்வாக திறனை பாராட்டவேண்டும் ..
அனால் ..எது எப்படியோ ...
தி மு க வுக்கு " சங்கு ஊதினால் சரி "..
இனி தி மு க ..தமிழ் நாட்டில் தலையெடுக்க முடியாது ..
எல்லா கூட்டணி கட்சிகளும் ..வெளியேறியாச்சு ...தனிமரம்தான் ...
கூட்டணி வச்சி ..ஜெயிக்க முடியல ...
இனி தனி மரம்தான் ...ஜெயிக்க முடியாது ...ஜெயிக்க முடியாது ..ஜெயிக்க முடியாது ..
இனி தொடர் தோல்விதான் ...
கோணவாயன் ...கொளத்தூர் கொத்துப்புரோட்டா ...தான் கடைசி முதலமைச்சர் ..
அடுத்த அடுத்த ..தேர்தலில் தில்லுமுல்லுகழகம் ...காணாமல் போகும் ..
தி மு க வுக்கு அடுத்த முறை " சங்கு " சின்னம் கிடைக்கும் ..
சாமான் என்கிற " சீமான் " திரள் நிதி திருடன் ...௦.௦௦௦௦% ஓட்டுகள் பெற்று .. அழிந்து போகும் ..
சாட்டைக்கு ...சங்குதான் ...
எந்த வேலையும் செய்யாமல், அரசு செய்யும் சில திட்டங்கள் அறிவிக்கும் போது மட்டும் பாராட்டுவதற்காக மேஜையில் தட்டி சம்பளம், சலுகைகள் மரியாதை இவை பெற்று வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்வதற்காகவே எம் எல் ஏ , எம் பி பதவிக்கு போட்டி போடும் படிப்பறிவற்ற திறனற்றவர்களை அவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவராயினும் வாக்காளர்கள் புறக்கணித்து தேர்ந்தெடுக்காமலிருந்தால் நலன் பயக்கும்.
குடிக்கவே தண்ணி இல்லையாம்....
கொப்பளிக்க பன்னீராம்....
தற்குறி வெற்றி மாடல்.....
There should be a Job description and they must be monitored for their routine. But coming to chennai from his constituency will be a costly affair. From their salary they can buy the car and fuel allowance can be given
கார் அனாவசியம். அவர்களுக்கு சம்பளம் தரும்பொழுது எதற்கு இந்த வீண் சிலவு? யார் வீட்டுப்பணம்?.
இத்தனைவருஷம் இல்லாத ஒன்றை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இது மறைமுக லஞ்சம். திறமைசாலி வழக்கறிஞர்கள் வழக்கு பதிய வேண்டும். இது அரசின் கொள்கை முடிவு என அனுமதிக்கக்கூடாது. வேண்டுமானால் பஸ் வசதி ஏற்படுத்திக் கொள்ளட்டும். பொது மக்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது.கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றட்டும்.
மக்களின் வரி பணம் என்ற சிந்தனை வேண்டும். நீர் ஆதாரம் தேவைக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து இதற்கு ஆகும் செலவை செக் டேம்கள் கட்டினால் நாம் மற்றவர்கள் இடத்தில் கை ஏந்த வேண்டி இருக்காது.மேலும்
-
போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை; இரண்டாம் நாளே உத்தரவு வாபஸ்
-
கனடா பொருட்களுக்கான 50 சதவீத வரி நிறுத்தி வைப்பு; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
களை செடிகளை அகற்றும் பணி துவக்கம் ஐகோர்ட் உத்தரவின் கீழ் நடவடிக்கை
-
ஆதாரத்தோடு இருக்கு ஓபன் பண்ண வச்சிடாதீங்க; சட்டசபையில் முதல்வர் விஜய் ஆவேச பேச்சு
-
அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு; கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்கவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு
-
தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனை