ஆதாரத்தோடு இருக்கு ஓபன் பண்ண வச்சிடாதீங்க; சட்டசபையில் முதல்வர் விஜய் ஆவேச பேச்சு
சென்னை: அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு ஓபன் பண்ண வச்சிடாதீங்க; எதை எப்போ ஓப்பன் பண்ணணுமோ, அப்போ ஓப்பன் ஆகும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேசி கொண்டிருந்த போது, தவெக, திமுக எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன்; ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள்.
ஒரு வாரம் முன் நிதியமைச்சர் 3 துறையை ஆராய்ந்து அதன் கோப்புகள் என்னுடைய மேஜையில் தான் இருக்கிறது என்று கூறினார்.
அவர் போகிற போக்கில் சொல்லவில்லை; அவை உண்மையில் என் மேஜையில் தான் உள்ளன; அத்தனையும் ஆதாரத்தோடு உள்ளன; அதை ஓப்பன் பண்ண வெச்சுராதீங்க, எதை எப்போ ஓப்பன் பண்ணணுமோ, அப்போ ஓப்பன் ஆகும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
சிறப்பு வீடியோ!
ஆதாரம் கேட்ட திமுக எம்எல்ஏக்கள்; முதல்வர் விஜய் தரமான பதிலடி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
முதல்வர் அவர்களே திமுக ஊழல் செய்தற்கான ஆதாரங்கள் எல்லாம் உங்கள் பார்வைக்கு வந்த பின்பும் , இனியும் தாமதம் கூடாது . வழக்கு தொடரவேண்டும். ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மறித்து அவர்கள் உங்களை தாக்காமல் இருப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினால் , மக்கள் உங்கள் மீதும் ஆட்சியின் மீதும் உள்ள நம்பிக்கையை இழப்பீர்கள் . நாளை, ஒரு வேளை இந்த ஊழல்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும்போது , ஆதாரங்கள் தெரிந்தும் மறைத்த குற்றத்திற்கு உள்ள விளைவினை நீங்கள் தஎதிர் உள்ள வேண்டும்.
on lighter vein: நல்ல நாள் நல்ல நேரம் கிழமை அனைத்து சமூக சம நீதி எல்லாம் அடங்கிய.......
What the hell is this? This should be made public and not to keep it as a secret / instrument to keep the opposition in silent mode
பண்ணி பாருங்க. ஒன்னும் ஆகாது
எனக்கு திருடன் யாருன்னு தெரியும் ஆனா எனக்கு தேவையில்லை என்றால் வெளியில் சொல்ல மாட்டேன்? தடுப்பது எது? அந்த பரமபிதாவுக்கு தான் தெரியும்.மேலும்
-
கேரட் வரத்து குறைவு: விலை உயர்வால் பாதிப்பு
-
அரசு கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஓ.எஸ்., நீக்கம்; அமெரிக்க தொழில்நுட்ப சார்பை தவிர்க்க சீனா உத்தரவு
-
இது வெறும் ஆரம்பம் தான்; மும்பை உணவகங்களுக்கு துக்காராம் முண்டே எச்சரிக்கை
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி; மனவ் பவுலிங்கில் அசத்தல்
-
போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை; இரண்டாம் நாளே உத்தரவு வாபஸ்
-
கனடா பொருட்களுக்கான 50 சதவீத வரி நிறுத்தி வைப்பு; அதிபர் டிரம்ப் அறிவிப்பு