அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு; கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்கவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து அவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்று (ஆகஸ்ட் 19) விவாதிக்க மறுத்ததால் சட்டசபையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளநடப்பு செய்த பிறகு நிருபரக்களிடம் கூறியதாவது: சவுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் சீர்காழி மீனவர் உயிரிழந்தது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கவில்லை.
சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்து 5 நாட்கள் ஆகியும் விசாரணைக்கு எடுக்கவில்லை. தமிழர்களை காப்போம் என்கிறது தவெக அரசு; ஆனால் வெறும் பேச்சு மட்டும் தான். வேகத்தில் ஆட்சி அமைந்ததோ, அதே வேகத்தில் பாதாளத்திற்கு சென்று விடும். மீனவர்கள் 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கு கூட தவெக அரசு அனுமதி கொடுக்கவில்லை.
இவர்கள் எப்படி தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்? தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் உடல்கள் ஒரு வாரமாக சவுதியில் உள்ளது. அதை மீட்டுக் கொண்டுவரக் கூட அரசு தயாராக இல்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.