நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில்51 பேர் பலி
அபுஜா: நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 51 பேர் பலியாகினர்.
அதிகப்படியான பாரம் ஏற்றுதல், போதிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது போன்ற காரணங்களால் நைஜீரியாவில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், கோரோன்யோ மாவட்டத்தில் உள்ள கோராவ் கிராமத்தைச் சேர்ந்த பலர், ஆற்றின் மறுகரையில் உள்ள பண்ணைக்குச் செல்லும்போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள், குழந்தைகள் என 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இதுவரை 46 உடல்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் ஜிகாவாவில் இருந்து யோப் மாநிலத்திற்கு விவசாயிகள், மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். அதேபோல, கடந்த ஜூலை மாதம் ஜிகாவாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!