கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
வாஷிங்டன்: கலிபோர்னியா மாநில சட்டசபை நவம்பர் 8ம் தேதி தீபாவளியைக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியதுடன், மாநில மக்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி. தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் தீபாவளிக்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அரசு சார்பில் விழாக்களும் நடத்தப்படுகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளிக்கு விடுமுறை அறிவித்து மசோதா நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இது, மதச்சார்பின்மை விதிகளுக்கு மாறாக உள்ளதாக நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. இருப்பினும், கலிபோர்னியா மாநில சட்டசபை வரும் நவம்பர் 8ம் தேதியை தீபாவளி நாளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நீதிமன்றத் தடையையும் மீறி, இந்திய வம்சாவளியினர் பண்பாட்டைப் போற்றும் வகையில் கலிபோர்னியா சட்டசபை தீபாவளி பண்டிகை தொடர்பான தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றது. தீபாவளி உலகெங்கிலும் உள்ள பல மக்களால் மகிழ்ச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது.
சட்டசபை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோரால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானம், கலிபோர்னியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீதான ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள தீபாவளிப் பண்டிகையைச் சட்டசபை அங்கீகரிக்கிறது; மேலும், மகிழ்ச்சி நிறைந்த இக்கொண்டாட்டத்தில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க ஊக்குவிக்கிறது.
அந்த தீர்மானத்தில், ''முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளிப் பண்டிகையானது, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக 'ஒளித் திருவிழா' என்று அழைக்கப்படும் தீபாவளி, நல்ல ஆரோக்கியம், செல்வம், அறிவு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தும் விதமாக வீடுகள் மெழுகுவர்த்திகள், எண்ணெய் விளக்குகள் மற்றும் மண் அகல் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டு, வானம் பட்டாசுகளால் நிரப்பப்படும் ஒரு காலமாகும்.
தீபாவளிப் பண்டிகையானது பல்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது.
தீபாவளியைக் கொண்டாடுபவர்களுக்கு, ஞானம், கருணை மற்றும் மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சுய சிந்தனையில் ஈடுபடுவதற்கான ஒரு தருணமாகவும் இது அமைகிறது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலிபோர்னியாவில் சட்டசபை எல்லாம் இருக்கிறதா
இங்கும் இருக்கிறதே சில மத வெறியர்கள், இந்து பண்டிகைகள் என்றாலே குலைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தீபாவளி தீபாவளி தீபாவளிமேலும்
-
சுவீடனில் வாளுடன் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 18 வயது இளைஞர் கைது; ஒருவர் பலி
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!