விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
கோவை: விபத்தில் உயிரிழந்த வெள்ளகோவில் ஸ்டேஷன் போலீஸ் ரவிச்சந்திரனின் வாரிசுதாரருக்கு ரூ.1.40 கோடி விபத்து காப்பீட்டு தொகையை பேங்க் ஆப் பரோடா வழங்கியுள்ளது.
திருப்பூர் கிளை பேங்க் ஆப் பரோடாவில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகுப்பு கணக்கை போலீஸ்காரர் ரவிச்சந்திரன் வைத்திருந்தார். பேங்க் ஆப் பரோடா மற்றும் தமிழக அரசுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தகுதியுள்ள அரசு ஊழியர்கள் இச்சம்பள தொகுப்பு திட்டத்தின்கீழ் உள்ள விபத்து காப்பீட்டை பெற தகுதி உள்ளவர்கள்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ரவிச்சந்திரனின் மனைவி பிரியதர்ஷினி வங்கிக்கணக்கில் ரூ.1.40 கோடி காப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. கோவை பேங்க் ஆப் பரோடா சார்பில் பிராந்திய மேலாளர் கமலக்கண்ணன், முதன்மை மேலாளர் குமரகுரு, மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, திருப்பூர் எஸ்.பி., சிரிஷ்டி சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் இக்காப்பீட்டு தொகை வாரிசுதாரரிடம் முறையாக வழங்கப்பட்டது.
மேலும்
-
சுவீடனில் வாளுடன் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 18 வயது இளைஞர் கைது; ஒருவர் பலி
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!