வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
வீ டு அல்லது காலி மனை வாங்க வேண்டும் என்று திட்டமிடுவோர், அது தொடர்பான சில அடிப்படை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது, வீடு, மனை விற்பனையில், அந்தந்த பகுதிக்கான சந்தை மதிப்பு அடிப்படையிலேயே விலை முடிவு செய்யப்படுகிறது.
ஆனால், பத்திரப்பதிவு என்று வரும் போது, உண்மையாக கைமாறும் மதிப்புகளை மக்கள் மறைத்துவிடுகின்றனர். பதிவுத்துறை நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் தான், சொத்தின் மதிப்பை பெரும்பாலான மக்கள் பத்திரத்தில் குறிப்பிடுகின்றனர்.
இதில் வீடு, மனையை விற்பவர், சந்தை நிலவரம் அடிப்படையில் என்று சொல்லும் விலை சரிதானா என்பதை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். பல இடங்களில் உரிமையாளர்கள் அதிக விலையை தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.
இத்தகைய சூழலில், அந்த சொத்துக்கான உண்மையான சந்தை மதிப்பு என்ன என்பதை மதிப்பீட்டாளர் வாயிலாக அறிய வேண்டும். இது மட்டுமல்லாது, அந்த சொத்து தொடர்பான முந்தைய பத்திரப்பதிவில் என்ன மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது என்று பாருங்கள்.
வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பு என்ன, தற்போது வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும். பதிவுத்துறை இணையதளம்வாயிலாக இந்த விபரங்களை பொது மக்கள் எளிதாக பெறலாம்.
இதில் நீங்கள் வாங்கும் சொத்து தொடர்பான முந்தைய பத்திரப்பதிவில், வழிகாட்டி மதிப்பு தொடர்பாக பிரச்னை இருந்தால், வேறுபாட்டு தொகை வசூலிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து இருக்கும். இது தொடர்பாக பதிவுத்துறை உத்தரவுபடி, வேறுபாட்டு தொகையை உரிமையாளர் செலுத்த வேண்டும்.
சில இடங்களில் வழிகாட்டி மதிப்பு வேறுபாட்டு தொகையை உரிமையாளர் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த வேறுபாட்டு தொகை நிலுவையில் உள்ளதாக, அந்த சொத்துக்கான வில்லங்க சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
சொத்தின் வில்லங்க சான்றிதழில், பழைய வழிகாட்டி மதிப்பு வேறுபாட்டு தொகை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டால், அதை செலுத்த வேண்டியது அவசியம். பழைய வேறுபாட்டு தொகை நிலுவையை செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்ட பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும்.
இது போன்று வேறுபாட்டு தொகை நிலுவையில் இருந்தால், அதை செலுத்தி கணக்கை முடிக்க வேண்டும் என்று சொத்து உரிமையாளரிடம் வலியுறுத்தலாம். இத்தொகையை சொத்து வாங்குவோர் செலுத்த தேவையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
சொத்தின் வில்லங்க சான்றிதழில், பழைய வழிகாட்டி மதிப்பு வேறுபாட்டு தொகை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டால் அதை செலுத்த வேண்டியது அவசியம்.
மேலும்
-
5 மடங்கு உயர்ந்தது அரசு காப்பீடு தொகை அட்டை பெறும் வழிமுறை சுலபமாகுமா?
-
குட்டி பாப்பாவுக்கு மொட்டை போடறதுன்னா சும்மாவா!
-
வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தோல்வி; கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் அதிபர் டிரம்ப்
-
ரூ.200 கோடி அரண்மனையில் உலகின் மிக நீளமான டைனிங் டேபிள்!
-
தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் பெருமை; முதல்வர் விஜய் வாழ்த்து
-
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்பாரா? அமைச்சர் நிர்மல்குமார் பதில்