ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றி துவக்கம்
வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பஞ்ச மூர்த்தி புறப்பாடாகி கோயில் சன்னதி கொடிமரம் முன் எழுந்தருளினர். மாலை கோயில் வளாகத்தில் கருங்குருவிக்கு உபதேசம் செய்தல் விழா நடந்தது.
இன்று (ஆக 22) காலை 8:00 மணிக்கு வளையல் விற்ற லீலை கோயில் முதல் வல்லபகணபதி கோயில் வரை, மாலை 6:00 மணிக்கு கோயிலில் சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம், 23 மாலை 6:00 மணிக்கு பாணனுக்கு அங்கம் வெட்டியது, 24 காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் எழுந்தருளல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை, மாலை 6:00 மணிக்கு ரிஷப வாகன புறப்பாடு, ஆக.,25 மாலை 6:00 மணிக்கு உற்ஸவ சாந்தி பூஜை வழிபாடு நடக்கிறது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, கோட்டையம்மாள் அறக்கட்டளை, அண்ணாமலையார் டிரஸ்ட், குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி செமினிப்பட்டி, கச்சைகட்டி கிராமத்தினர் செய்கின்றனர்.
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!