வெஜ் தெகிரி என்ற காய்கறி சாதம் தயாரிப்பது எப்படி?

வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். அதிலும் அங்குள்ள மக்கள் இதை குளிர்காலத்தில் விரும்பி சமைத்து சாப்பிடுவார்கள். இதை நீங்கள் சாப்பிட சாப்பிட தெகட்டாத ஒர் உணவு. எனவே நீங்கள் இதை அடிக்கடி செய்து கூட சுவைக்கலாம். அதிலும் வெஜ் பிரியர்களுக்கென்றே கிடைத்த வரப்பிரசாதம். இதில் உங்களுக்கு பிடித்த காய்கறிகளையெல்லாம் ஒன்னா சேர்த்து கூட சமைக்க முடியும்.

இந்த ஆரோக்கியமான காய்கறி சாதத்தை எப்படி செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:1 கப் கேரட்1 கப் உருளைக்கிழங்கு1 கப் காலிபிளவர்1 கப் பட்டாணி1 கப் பீன்ஸ்1 கப் வெங்காயம்1 கப் செர்ரி தக்காளி1/2 கப் தயிர்1 ஸ்பூன் சீரகம்1 துண்டு பட்டை1 கருப்பு ஏலக்காய்4 மிளகு1 பிரிஞ்சி இலை2 பச்சை மிளகாய்தேவையான அளவு உப்பு1 ஸ்பூன் கரம் மசாலா தூள்1 ஸ்பூன் மிளகாய் தூள்1 ஸ்பூன் மஞ்சள் தூள்2 ஸ்பூன் மல்லித் தூள்1/2 கப் நெய்தேவையான அளவு தண்ணீர்1 கப் பாஸ்மதி அரிசி


செய்முறை : ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் பட்டை, பிரியாணி இலை, கருப்பு மிளகு, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வறுத்த பிறகு அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி கொள்ளுங்கள். பிறகு கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு பீன்ஸ் , காலிபிளவர் 1-2 நிமிடங்கள் நன்றாக வதக்குங்கள்.பச்சை பட்டாணி , தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் தயிர் சேர்த்து பிறகு எல்லா காய்கறிகளையும் போடுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் என்று எல்லா மசாலாக்களையும் போட்டு கிளறிக் கொள்ளுங்கள்.பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து அதையும் காய்கறிகளுடன் சேர்த்து கிளறுங்கள்.

ரொம்ப கிளற வேண்டாம். ஏனென்றால் அரிசி உடைய வாய்ப்புள்ளது. இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் சமைக்கவும்.பிறகு பாத்திரத்தில் இருந்து சுடச்சுட காய்கறி சாதத்தை எடுத்து தயிர் அல்லது ரைதா வச்சு பரிமாறுங்கள். ஆரோக்கியமான இந்த உணவை ட்ரை பண்ண மறந்து விடாதிங்க.

Advertisement