சிலம்பத்தில் சாதனை மாணவருக்கு பாராட்டு
திருநகர்: திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாரி செல்வம் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பம் சுழற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் உலக சாதனையை பதிவு செய்தார். மாணவரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, முதன்மை கல்வி அலுவலர் தயாளன் பாராட்டினர்.
பள்ளி நிர்வாகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிலம்பம் ஆசிரியர் பாக்யராஜ் பாராட்டினர்.
தலைமை ஆசிரியர் கூறும்போது, ''இம்மாணவர் 5 ம் வகுப்பு படிக்கும் போதே 5 மணி நேரம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார். அச்சாதனையை வெளி மாவட்ட பள்ளி மாணவர் ஒருவர் 8 மணி நேரம் சிலம்பம் சுழற்றி முறியடித்தார். தற்போது மாரிச்செல்வம் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பம் சுழற்றி மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார் என்றார்.
மேலும்
-
ஜவுளி சந்தை வர்த்தக இலக்கு 33.50 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஜவுளி துறை கமிஷனர் தகவல்
-
கொடிசியாவில் நாளை வரை 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி
-
ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'
-
சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு
-
மூன்றில் ஒரு கால்நடைக்கு அடர்தீவனம் கிடைக்கவில்லை 37 சதவிகிதம் பற்றாக்குறையால் புதிய சவால்
-
நாடு முழுதும் வீடு விலை 6 சதவீதம் உயர்வு