போலீஸ் செய்திகள்
ரூ.10.55 லட்சம் மோசடி
மதுரை: பழங்காநத்தம் சரவணகுமார். இவர் பாத்திமா கல்லுாரி அருகே ஒரு மோட்டார் நிறுவனத்தில் விற்பனை பொறுப்பாளராக வேலை செய்கிறார். இதன் கிளை நிறுவனத்தில் வாகன டயர்களை வாங்கி தத்தனேரி ஸ்டீபன் விற்பனை செய்தார். டயர்களுக்கான பாக்கித் தொகை ரூ.10.55 லட்சத்தை ஸ்டீபன் தர மறுத்தார். சரவணகுமார் செல்லுார் போலீசில் புகாரளித்தார். மோசடி வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் இருவர் பலி
அவனியாபுரம்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாண்டித்துரை 22, அதே பகுதி முனீஸ்வரர் 21, இருவரும் மதுரை திருப்பாலை பகுதியில் கொத்தனார் வேலை பார்த்தனர். இருவரும் டூவீலரில் நேற்று காலை விருதுநகர் சென்றனர். சின்ன உடைப்பு பகுதியில் அவர்கள் சென்ற டூவீலர் சாலையோர தடுப்பு கம்பிகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாண்டித்துரை, முனீஸ்வரர் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். ----
திருமண ஆசை காட்டி ஏமாற்றிய டாக்டர்
திருமங்கலம்: ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்த அழகு நிலைய உரிமையாளர் சுஜிதா 30. இவர் இணையதளம் மூலம் காரைக்குடி டாக்டர் மணிரத்தினத்துடன் பழகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் வந்த டாக்டர் மணிரத்தினம் திருமணம் செய்வதாக கூறி சுஜிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து சுஜிதா கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளார்.
கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறிய மணிரத்தினம், சத்து மாத்திரைகள் எனக்கூறி சில மாத்திரைகள் கொடுத்துள்ளார். அவை கருக்கலைப்பு மாத்திரைகள் என அறிந்த சுஜிதா, அதை பயன்படுத்த மறுத்ததுடன், தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து மணிரத்தினம் அவரை மிரட்டி உள்ளார். திருமங்கலம் மகளிர் போலீசார், மணிரத்தினம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஜவுளி சந்தை வர்த்தக இலக்கு 33.50 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஜவுளி துறை கமிஷனர் தகவல்
-
கொடிசியாவில் நாளை வரை 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி
-
ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'
-
சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு
-
மூன்றில் ஒரு கால்நடைக்கு அடர்தீவனம் கிடைக்கவில்லை 37 சதவிகிதம் பற்றாக்குறையால் புதிய சவால்
-
நாடு முழுதும் வீடு விலை 6 சதவீதம் உயர்வு