'முதல்வர் முகத்தை பார்க்க 'டிஜிட்டல் ஸ்கிரீன்' வேண்டும்'

சென்னை : ''முதல்வர் விஜயின் முகத்தை பார்க்க, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் முன், 'டிஜிட்டல் ஸ்கிரீன்' வைக்க வேண்டும்,'' என, சட்டசபையில் மதுரை வடக்கு தொகுதி த.வெ.க., --- எம்.எல்.ஏ., கல்லாணை கோரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதாவது:

கடந்த ஆட்சியில் நடந்த ஊழலால், மதுரை மாநகராட்சியில், மேயர், ஐந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் ஊழலை ஒழித்து, கட்சி நிதி பெறுவதை நிறுத்திய முதல்வர் விஜய், மதுரையின் பிரச்னையான, 'பாஸ்வேர்ட் பண்டு' முறையையும் ஒழித்து, சீரழிந்து கிடக்கும் மதுரை மாநகராட்சியை காப்பாற்ற வேண்டும்.

சிறு வயதிலிருந்து, முதல்வர் விஜய் எங்கு சென்றாலும், ஓடோடிச் சென்று பார்க்கும் எங்களை, அவர் அருகிலேயே இப்போது அமர வைத்துள்ளார். ஆனால், அருகில் இருந்தாலும், அவரது முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை.

பின்னால் அமர்ந்திருப்பதால், முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தால், தொலைக்காட்சியில் தான் பார்க்க முடிகிறது. எனவே, முதல்வரின் அழகிய முகத்தை பார்க்க, ஆளுங்கட்சி தரப்பு எம்.எல்.ஏ.,க்களின் முன்பு, 'டிஜிட்டல் ஸ்கிரீன்' ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement