பழுதான டேங்கர் லாரியில் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பாளையம்;குமாரபாளையம் பகுதியில் இருந்து ஈரோட்டை நோக்கி, நேற்று காலை டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது. பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை பகுதியில் ரவுண்டானா வளைவில் திரும்போது லாரி பழுதாகி நின்றுவிட்டது.

டிரைவர் எவ்வளவு முயற்சி செய்தும் லாரியை எடுக்க முடியவில்லை. வளைவு பகுதி என்பதால் செல்ல வழியின்றி பின்னால் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, பொக்லைன் வரவழைக்கப்பட்டு, ரோப் மூலம் டேங்கர் லாரியை இழுத்துச்சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டது. இதனால், அரைமணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement