கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
அரவக்குறிச்சி:க. பரமத்தி அருகே உள்ள குப்பம் பகுதியில், புதிதாக கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
புகழூர்
வட்டம், குப்பம் கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான, புதிதாக கல்
குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், குப்பம் பகுதியில்
உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட வருவாய்
அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மாசு
கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்
பங்கேற்ற பெரும்பாலான பொதுமக்கள், கல் குவாரி அமைக்கப்பட்டால்
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும், ஊராட்சிக்கு
வருவாய் கிடைப்பதுடன் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும் பயனுள்ளதாக
இருக்கும் என்று கூறி ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே சமூக ஆர்வலர்கள்
மற்றும் சில பொதுமக்கள் கல் குவாரிகள் அமைக்கப்பட்டால்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், வெப்பத்தின் தாக்கம்
அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்பு
ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டத்தில்
கல் குவாரி உரிமையாளர்கள், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை
சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கூலித் தொழிலாளர்கள் கலந்து
கொண்டு, குவாரி அமைப்பது தொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு
செய்தனர்.
பொதுமக்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பதிவு
செய்யப்பட்ட நிலையில், கல் குவாரி அமைப்பது தொடர்பான அடுத்தகட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!