பிரம்ம குமாரிகள் ரத்த தான முகாம்

கரூர்:பிரம்ம குமாரிகள் அமைப்பு, கரூர் இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் சார்பில், ரத்த தான முகாம், கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது.
ரத்த தான முகாமை, தொழில் அதிபர் கணேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 80 பேர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில், டாக்டர்கள் திருமலைசாமி, சண்முகம், தீபா, பிரம்ம குமாரிகள் அமைப்பு நிர்வாகி சாரதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement