பவானிசாகர் நீர்மட்டம் 54.49 அடியாக சரிவு
புன்செய்புளியம்பட்டி:நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை, பவானிசாகர் அணையின் நீர்வரத்திற்கு பிரதானமாகும்.
கடந்த, 15ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி உயிர் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு நாளில் அணை நீர்மட்டம், 58.20 அடி, நீர் இருப்பு, 6.6 டி.எம்.சி.,யாக இருந்தது. இந்நிலையில் அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 650 கன அடி; கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி; குடிநீருக்கு, 100 கன அடி என, 3,050 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேசமயம் நேற்று அணை நீர்வரத்து, 877 கன அடியாக இருந்தது. நீர் வரத்தை நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 54.49 அடி, நீர் இருப்பு, 5.6 டி.எம்.சி.,யாக இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடியாக இருந்தது.
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!