நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து திரும்பிச் சென்றது
கூடலுார்: சபரிமலை அருகே நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து திரும்பி சென்றது.
சபரிமலைக்கு செல்லும் அனைத்து ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். பக்தர்களுக்காக இங்கு தற்காலிக ஹெலிகாப்டர் தளம் (ஹெலிபேட்) உள்ளது. அவசரகால மீட்பு பணிகள், பேரிடர் மேலாண்மை, வி.ஐ.பி., வருகை ஆகியவற்றிற்காக அமைக்கப்பட்டது.
நேற்று காலை 11:00 மணிக்கு ஹெலிகாப்டர் தளத்தை நோக்கி இந்திய விமானப்படைக்கு சொந்தமான இஜட் 5151பதிவு எண் கொண்ட ஹெலிகாப்டர் வந்தது. குறைந்த உயரத்தில் 10 வினாடிகள் வட்டமடித்து பறந்தது. அதன்பின் தரை இறங்காமல் திடீரென திரும்பி சென்றது.
சமீபத்தில் சபரிமலை சன்னிதானத்தில் கோயில் கருவறைக்கு சற்று மேலே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வட்டமடித்து பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பயிற்சிக்காக பறந்துசென்ற போது மோசமான வானிலை காரணமாகவே தாழ்வாக பறக்க நினைத்ததாக விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், கூடுதல்பாதுகாப்பு மண்டலமான கோயில் பகுதியை படம் பிடிப்பதற்காகவே ஹெலிகாப்டர் வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. மீண்டும் நிலக்கல்லில் விமானப்படை ஹெலிகாப்டர் பறந்தது சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கல்லில் பணியில் இருந்த போலீசாருக்கு ஹெலிகாப்டர் வருகை மற்றும் திரும்பிச் சென்றதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த ஹெலிகாப்டர் திருவனந்தபுரம் தளத்தில் இருந்து வந்ததாகவும் இயற்கை பேரிடர் மீட்பு பணிகளுக்கான வழக்கமான பரிசோதனை மற்றும் பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!