புதிய வசதிகளுடன் வீ தி லீடர்ஸ் இணையதளம்; மாற்றுவோம், மாறுவோம் என அண்ணாமலை அழைப்பு
சென்னை: வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தன்னுடைய இயக்கத்தின் இணையதளம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் மாற்றுவோம், மாறுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக பாஜ., முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை தொடங்கி உள்ளார்; விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். தனது அமைப்பின் சார்பில், மாதம் ஒரு சமூகப்பணி என மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம், தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.
கன்னியாகுமரி, துாத்துக்குடி கடற்கரைகளிலும், மதுரை வைகை ஆற்றிலும், அண்ணாமலை தலைமையில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர். தனது இயக்கத்தில் சேருவதற்கு, அண்ணாமலை அறிமுகம் செய்துள்ள இணையதளத்தில் தற்போது வரை 19.57 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) இயக்கத்தின் இணையதளம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எங்களுடைய இணையதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து பயன்பெறுங்கள். மாறுவோம், மாற்றுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பொது மக்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான குறைகளை, உதாரணம் சாலை ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல், வரி ஏய்ப்பு, ஒழுங்கின்மை, தைரியமாக எடுத்துரைக்கும் தலைவர்தான் தேவை.
பிள்ளை பெற இன்னும் 5 வருடங்கள் உள்ளன . பிறக்கும் பிள்ளை ஆரோக்கியமாக இருக்க அவசர கர்பமோ குறைப்பிரசவமோ கூடாது . எனவே தான் அண்ணாமலை பிறக்கும் பிள்ளை நல்லவனாகவும் வல்லவனாகவும் இருக்க வலுவான அடித்தளமும் நல்ல கருத்துக்களையும் தனது இயக்கத்தின் கொள்கையாக வைத்துள்ளார்
பிள்ளை பெற இன்னும் ஐந்து வருடங்களா? என்ன ராட்சச பிள்ளையா பெறப் போகிறார்? தாயிடம் கருவாகி பிள்ளை பெற மொத்தமே பத்து மாதங்கள்தான் என்பது கூட தெரியாத லீடர்ஸ்சா இருக்கீங்களே? அதனாலதான் அந்த வேலையை உங்களுக்கு மொதல்ல கொடுக்கிறார் உங்கள் தலைவர்.
ஐயா அண்ணாமலை சாமி வீத லீடர்ஸ் நீ ஒரு டும்மு முதல்ல காவிரியில் தண்ணி வரல அத பாரு அதுக்கு போராட்டம் பாரு இங்கே இருக்கிற விவசாயிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படும் சுத்தமா தஞ்சாவூர் மாவட்டத்தில தண்ணியே இல்ல தயவு செய்து அதை பாரு டேய் என்னடா இப்படி பீத்திக்கிறீங்க தமிழ்நாட்டுல காவிரியில் தண்ணியே இல்ல அதுக்கு ஒரு வியாக்கியானமும் காணோம் சும்மா எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சட்டசபையில் அவனை மாத்தி இவன் இவன மாத்தி அவன் கழுவி கழுவி ஊத்துறாங்க தயவுசெய்து தமிழ்நாட்டு விவசாயிகள கொஞ்சம் பாருங்கடா
மாறுவோம், மாற்றுவோம் 2026ன் அண்ணாமலையின் இந்தத் தலைப்பு மாற்றம், முன்னேற்றம் என்ற அன்புமணியின் 2016 தலைப்பை கொஞ்சம் மாற்றி சுட்டது போல் தெரிகிறதே?
தற்போதைய வாக்காளர், வேட்பாளர் தகுதி தேர்வின்மை காரணமாக அண்ணாமலை போன்ற தலைவர்களால் அரசியலில் முதல் வரிசைக்கு வர முடியாது. தேர்தல் சீர்த்திருத்த கோரிக்கை வைக்க வேண்டும்.
விஜய் தேர்வுக்கு சினிமா, திராவிட கட்சிகளில் உள்ளடி வேலைகள், நடு நிலை வாக்காளர் புதிய அமைப்பு மீது விருப்பம். அனைத்து கட்சியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இழந்த உடன், எடப்பாடியை பன்னீர் செல்வம் போல் மதிப்பு இழக்க பிஜேபி செய்து இருக்க முடியும்
மாறுவோம் என்றால் மக்கள்தான் ஏற்கெனவே விஜய் பக்கம் மாறி விட்டார்கள். மாற்றுவோம் என்றால் விஜயைத்தான் மாற்றுவோம் என்கிறாரா? அதுவும் இருக்காது ஏன்னா ஏற்கெனவே ஒரு வருடம் டைம் கொடுத்திருக்காரு.ஒரே குழப்பமா இருக்கே? கஷ்டமப்பா!
களத்தில் இறங்கி வேலை பார்க்க அமைப்பு ரீதியாக ஆட்கள் இருக்கும்வரை அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும். முதுகில் குதிரை ஏறும் தேசிய கட்சிகளுக்குத்தான் சவால் .
மிகவும் சரியான வழிமுறை வாழ்த்துக்கள் .
தேறாது
சீனனான்
இரண்டு
முடிந்தது
ஒன்னும் நடக்காது. யாரும் மாறப்போவதுமில்லை யாரையும் மாற்றவும் முடியாது தமிழ் நாட்டில்.மேலும்
-
துக்காராம் முண்டேவைத் தொடர்ந்து ரோஷன் ஜேக்கப்; உ.பியில் உணவுக் கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை
-
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு; 23 பேர் காயம்
-
குரல் சொல்லும் குறள்; கழுதை காதல் காசு தரும்!
-
ரூ.1.81 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கும் தமிழக அரசு நிறுவனங்கள்
-
தனியார் நிறுவனத்தில் அத்துமீறியதாக த.வெ.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
-
பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி கொடுக்க முயன்றாரா பஞ்சாப் முதல்வரின் மனைவி?