பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி கொடுக்க முயன்றாரா பஞ்சாப் முதல்வரின் மனைவி?

8


சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை முடித்து வைக்க, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர், 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் குற்றஞ்சாட்டியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை முடித்து வைக்க, முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர், 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, ஓய்வு பெற்ற பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங், சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.

இது, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து புகார் அளித்த, 'லீகல் ரைட்ஸ் அப்சர்வேட்டரி' என்ற அமைப்பு, 'இது போன்ற தலையீடுகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியம், பாதுகாப்பு, நியாயமான விசாரணை மற்றும் நீதி பெறும் உரிமையை சமரசம் செய்து விடும்' என, கவலை தெரிவித்தது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் கமிஷன், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, இரு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, பஞ்சாப் அரசு தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளது. இது, முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

@block_B@

நோட்டீஸ் அனுப்பிய குர்ப்ரீத் கவுர்

தன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் சிங்குக்கு முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நோட்டீஸ் கிடைத்த, 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கும்படியும், தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.block_B

Advertisement