ரூ.1.81 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கும் தமிழக அரசு நிறுவனங்கள்
சென்னை: தமிழக அரசின் உத்தரவாதத்துடன், கடந்த ஜூலை வரை, 24 பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் வைத்துள்ள கடன் நிலுவைத்தொகை, 1.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
தமிழக அரசின் கீழ், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், மாநில விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செயல் படுகின்றன. மேலும், தமிழக மின் தொடரமைப்பு கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் பகிர்மான கழகம், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் போன்றவையும் செயல்படுகின்றன.
அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் உள்ளிட்டவை, தங்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக வங்கிகள், மத்திய நிதி நிறு வனங்களில் கடன் வாங்குகின்றன. தாங்களே நேரடியாகவும், அரசு உத்தரவாதத்தின் அடிப்படையிலும் கடன்கள் வாங்கப்படுகின்றன. இரு வகையிலும் வாங்கிய மொத்த கடன், 3.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை நிலவரப்படி, தமிழக அரசின் உத்தரவாதத்துடன் 24 பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் வைத்துள்ள கடன் நிலுவை, 1.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட 10 பொது நிறுவனங்களின் கடன் 36,256 கோடி ரூபாயாகவும், 11 வாரியங்கள் மற்றும் கழகங்களின் கடன் 1.44 லட்சம் கோடி ரூபாயாகவும், மூன்று கூட்டுறவு நிறுவனங்களின் கடன் 152 கோடி ரூபாயாகவும் உள்ளன.
கடனை வசூல் செய்ய தனியார் நிறுவனங்கள் கிட்டே உடுங்க. ஆபிஸ்ல டென்ட் அடிச்சு உக்காந்து, குண்டர்களை அனுப்பி வசூல் பண்ணிருவாங்க.