மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்பாரா? அமைச்சர் நிர்மல்குமார் பதில்
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்பது குறித்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் கோவில் கும்பாபிஷேகத்தை அருகில் காண அனுமதிக்கப்படுவார்கள். மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்பது குறித்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே, கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் முதல்வரும் வருவது இன்னும் கூட்டத்தை அதிகரிக்கும்.
அதற்கான சாத்தியக்கூறு இப்போது வரைக்கும் இல்லை. கலெக்டருக்கு தெரியாமல் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தேவையான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
எம்எல்ஏக்கள் பேச முந்தைய காலகட்டத்தை விட கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது; 2 மணிக்கு முடிய வேண்டிய சட்டசபை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கையில் விவாதிக்க வேண்டிய விஷயத்தை விவாதித்து கொண்டு இருக்கிறோம். முந்தைய காலகட்டத்தில் மானியக் கோரிக்கை மீது பேசுவதற்கு எல்லோருக்கு 2,3 மற்றும் 5 நிமிடம் தான் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தற்போது 45 நிமிடம் வரை எல்லாம் எதிர்க்கட்சியின் எவ வேலு பேசி இருக்கிறார். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தோல்வி; கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் அதிபர் டிரம்ப்
-
ரூ.200 கோடி அரண்மனையில் உலகின் மிக நீளமான டைனிங் டேபிள்!
-
தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் பெருமை; முதல்வர் விஜய் வாழ்த்து
-
திமுக மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு; நிர்வாகிகளுக்கு வயது உச்சவரம்பு; செயற்குழுவில் தீர்மானம்
-
புதிய வசதிகளுடன் வீ தி லீடர்ஸ் இணையதளம்; மாற்றுவோம், மாறுவோம் என அண்ணாமலை அழைப்பு
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 உயர்வு