ரூ.200 கோடி அரண்மனையில் உலகின் மிக நீளமான டைனிங் டேபிள்!
-நமது நிருபர்-
ஐதராபாத் நிஜாம் அரண்மனையாக இருந்து இப்போது ஹோட்டலாக மாறியுள்ள பாலக்நுமா மாளிகையில் கலைநயம் மிகுந்த 108 அடி நீள டைனிங் டேபிள் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிக நீளமான டைனிங் டேபிள்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் நிஜாம் அரண்மனை அமைந்துள்ளது. தற்போது இந்த அரண்மனை ஹோட்டலாக மாறியுள்ள பாலக்நுமா மாளிகையில் கலைநயம் மிகுந்த 108 அடி நீள டைனிங் டேபிள் உள்ளது.
5.7 அடி அகலமும் கொண்டது. 60 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் மதிப்பு ரூ.200 கோடி என மதிப்பிட்டுள்ளது. இங்கு உள்ள நீள டைனிங் டேபிள் பலரது கவனம் பெற்றுள்ளது. 101 பச்சை நிற நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரோஸ் மரத்தால் செதுக்கப்பட்டு, பச்சை நிறத் தோல் இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் மெல்லிய குரலில் பேசினாலும், மறுமுனையில் அது தெளிவாகக் கேட்கும்படி இந்த டைனிங் டேபிள் அமைக்கப்பட்டு இருப்பது தான் மிகவும் சிறப்பு.
இந்த சாப்பாட்டு அறை பெல்ஜிய நாட்டு அழகிய சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மேசையில் உலகத் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் பலரும் அமர்ந்து உணவருந்தியுள்ளனர்.
மேலும்
-
பைக் மீது ஜே.சி.பி., மோதி விபத்து மருத்துவக்கல்லுாரி மாணவர் பலி
-
அலையோரம் ஜொலித்த வண்ண பலுான்கள் புதுச்சேரி உணவு திருவிழாவில் மேஜிக்...
-
பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு
-
பெண்கள் குறித்து மனுஸ்மிருதி சொல்வது என்ன; ராகுல் சர்ச்சை பேச்சு
-
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருவாரூர் பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி புதுச்சேரி வாலிபருக்கு போலீஸ் வலை
-
பற்றாக்குறை வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் மானிய விலையில் வைக்கோல் வழங்க கோரிக்கை