தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் பெருமை; முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழகத்தின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம்.
தமிழகத்தின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது. இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்! நல்வாழ்த்துகள்!. இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
மேலும்
-
5 மடங்கு உயர்ந்தது அரசு காப்பீடு தொகை அட்டை பெறும் வழிமுறை சுலபமாகுமா?
-
குட்டி பாப்பாவுக்கு மொட்டை போடறதுன்னா சும்மாவா!
-
வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தோல்வி; கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் அதிபர் டிரம்ப்
-
ரூ.200 கோடி அரண்மனையில் உலகின் மிக நீளமான டைனிங் டேபிள்!
-
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்பாரா? அமைச்சர் நிர்மல்குமார் பதில்
-
திமுக மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு; நிர்வாகிகளுக்கு வயது உச்சவரம்பு; செயற்குழுவில் தீர்மானம்