5 மடங்கு உயர்ந்தது அரசு காப்பீடு தொகை: அட்டை பெறும் வழிமுறை சுலபமாகுமா?

கோவை: காப்பீட்டு தொகை போதாத நிலையில், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதி கிடைக்க நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனை 'டீன்'களுக்கான ஆய்வு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அரசுக்கு அவசர பரிந்துரை அளிக்கப்பட்டது.

அதையடுத்து, காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து, ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார். கோவையில், 2025 ஆக. முதல் 2026 ஜூலை வரை மட்டும், காப்பீடு திட்டத்தில் 12,338 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 7,985 பேர் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றவர்கள். சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்றவர்கள் 530 பேர்.

காப்பீடு திட்ட அட்டை பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என அடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

'ஸ்மார்ட் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே, காப்பீடு அட்டை என்ற நடைமுறையை மாற்ற வேண்டும். கணவரை பிரிந்தவர்கள், தனியாக வசிப்பவர்கள் காப்பீடு அட்டை பெற முடியாத நிலை உள்ளது. ஆதார் எண் இருந்தாலே, காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என்று நடைமுறையை எளிமையாக்க வேண்டும். அட்டை பெற அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில், பிரத்யேக பிரிவு ஏற்படுத்த வேண்டும்' என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.

Advertisement