ஹாக்கி, கோ கோ போட்டி: வெற்றி பெற்ற பள்ளிகள்
திருப்பூர்:திருப்பூர் வடக்கு குறுமைய மாணவர் ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தனர். 14 வயது பிரிவில் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், ரோட்டரி கிளப் பள்ளி இரண்டாமிடம்; 17 வயதில் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப் பள்ளி இரண்டாமிடம்; 19 வயதில் செஞ்சுரி பள்ளி முதலிடம், பிரண்ட்லைன் பள்ளி இரண்டாமிடம்.
கோ கோ போட்டி: நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தெற்கு குறுமைய கோ கோ போட்டி நடந்தது. பள்ளி நிறுவனர் மோகன், முதல்வர் சுதா துவக்கி வைத்தனர். 14 வயது பிரிவில் 12 அணிகளும், 17 வயதில் 8 அணிகளும் பங்கேற்றன. இரு பிரிவிலும் திருமுருகன் மெட்ரிக் பள்ளி முதலிடம், வீரசிவாஜி பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
.