முகாசபரூரில் ரத்ததான முகாம்
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூரில் ரத்த தான முகாம் நடந்தது.
மங்கலம்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், த.வெ.க., மற்றும் சிவா மெமோரியல் நற்பணி மன்றம் சார்பில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பாரிசெல்வி தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகி எழில்மணி வரவேற்றார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் குலோத்துங்கசோழன், செவிலியர்கள் சரஸ்வதி, இந்துமதி, கீதா உள்ளிட்ட குழுவினர் இளைஞர்கள், கல்லுாரி மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், செல்லதுரை, அப்பாதுரை, கிராம சுகாதார செவிலியர் வசந்தாமணி உட்பட பலர் பங்கேற்றனர். நம்பிக்கை மைய ஆலோசகர் செல்வமணி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement