சிறு நேரத்தில்… சிறு கவிதை!

‘நீ கல்யாணம் முடித்தாய்; நான் கண்ணீர் வடித்தேன்; நீ தாய் ஆனாய்; நான் தாடியானேன்; மொத்தத்தில் நீ ஜாலி; நான் காலி’

இந்த வரிகளை 7ம் வகுப்பு படிக்கும்போது படித்ததாகக் கூறி, தனது கவிதைப் பயணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார் சுஜாதா.



இவ்வளவு எளிமையாகவும், குறைந்த வார்த்தைகளிலும் கவிதை எழுத முடியுமா என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வம், நாளடைவில் ஹைக்கூ கவிதைகள் மீது கவனம் செலுத்த வைத்தது.

ஹைக்கூ எழுத பெரிய இலக்கண அறிவோ, நீண்ட நேரமோ தேவையில்லை. புத்தகம் படிக்கும் பழக்கமும், மொழி மீது ஆர்வமும் இருந்தாலே போதும்,’’ என்கிறார் இவர்.

படிப்பு, வேலை, குழந்தைகள் என வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகள் இருந்தாலும், கிடைக்கும் சிறிய நேரத்தைக் கூட இவர் வீணாக்குவதில்லை.

பணி நிமித்தமாக கோவையில் இருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்யும் நேரம்தான் இவர் கவிதை எழுதும் நேரம். நான் எழுதிய பல ஹைகூக்கள் அப்படி உருவானவைதான் என்கிறார் சுஜாதா.

‘‘நேரம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஒருவருக்கு மட்டும் அதிகமாக வாட்ச் ஓடுவதில்லை. செல்போன் பார்க்கும் நிமிடங்களை புத்தகம் படிப்பதற்கோ, சிறு கவிதை எழுதுவதற்கோ, மனதுக்குப் பிடித்த ஆக்கபூர்வமான செயலிலோ செலவிடலாம்,’’ என்று கூறி விடைபெற்றார்.

யாருக்கு தெரியும்....ைஹக்கூ போன்ற அந்த சிறு நேரம், ஒருநாள் உங்கள் அடையாளமாக மாறலாம்!

Advertisement