பெண்ணை தாக்கியஆசாமிக்கு வலை

பரங்கிப்பேட்டை: பெண்ணை தாக்கிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் எழிலரசி, 28; இவர், நேற்றுமுன்தினம் வீட்டிற்கு எதிரே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார், 40; குடிப்போதையில், நீ எதற்கு இங்கு நிற்கிறாய் என கேட்டு ஆபாசமாக திட்டி தாக்கினார்.

இதுகுறித்து, எழிலரசி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, செல்வகுமாரை, தேடிவருகின்றனர். 

Advertisement