கண்டவராயன்பட்டியில் கண் சிகிச்சை முகாம்
திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் (ஆகஸ்ட் 23) இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
கண்டவராயன்பட்டி தேவியாரம்மன் திருமண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை முகாம் நடைபெறும். கோவிலுார் காணல் கண் மருத்துவமனை குழுவினரால் கண் பரிசோதனை நடைபெறும். பரிசோதனைக்கு வருபவர்கள் ரேஷன்கார்டு,ஆதார் கார்டு,வாக்காளர் அட்டை நகல்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். கிட்டப்பார்வைக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும். முகாமை சென்னை அன்னை மீனாட்சி இலவச மருத்துவ உதவி சங்கம், சிவகங்கை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவிலுார் காணல் கண் மருத்துவமனை, குளோபல் மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement