படிக்க சீட் வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி
சிவகாசி:சிவகாசி பி.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் சென்னையில் உள்ள பல்கலையில் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி. காம் படிப்பில் சேருவதற்காக இவரின் நண்பரான திருப்பதியிடம் கூறியுள்ளார். இவர் தனக்குத் தெரிந்த நபரான மதனிடம் கூறியுள்ளார்.
அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லுாரியில் பேராசிரியராக பணி புரியும் நெல்சனை தொடர்பு கொள்ள கூறி அலைபேசி எண் கொடுத்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட சுரேஷ்குமாரிடம் சீட் வாங்குவதற்கு நெல்சன் ரூ. 25 லட்சம் கேட்டு உள்ளார். அதனை நம்பிய சுரேஷ்குமார் அவருக்கு ரூ. 6 லட்சத்து 89 ஆயிரம் வங்கி மூலமாக அனுப்பி வைத்தார். ஆனால் சீட் வாங்கி தராமல் நெல்சன் ஏமாற்றினார். இதுகுறித்து சுரேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்ற கிளை மதுரையில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவு படி கிழக்கு போலீசார் நெல்சன் மீது வழக்கு பதிவு செய்தனர்.