இதே நாளில் அன்று
ஆகஸ்ட் 23:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 1919ல் இதே நாளில் பிறந்தவர் சுசுமு ஓனோ.
இவர், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் படித்து, கக்குசியூவின் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1957 முதல், ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராய தொடங்கிய இவர், கொரிய அல்லது ஆஸ்திரனேசிய மொழிகளுடன் பெரிய அளவிலான மரபுத் தொடர்புகள் இல்லாததை உணர்ந்து, திராவிட மொழிகளை ஆராய்ந்தார்.
இதில், கி.மு., 500 - கி.பி., 300 காலகட்டத்தில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயம், வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்றவற்றில், தமிழ் மொழியின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஆய்வின் வாயிலாக நிரூபித்தார்.
பின், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பொற்கோவிடம் முறைப்படி தமிழ் கற்று, தமிழ் - ஜப்பானிய மொழி சொற்கள், ஒலிகள், இலக்கணம் மற்றும் இலக்கியம் மட்டுமின்றி, ஜப்பானின் யாயோய் கல்லறைகளையும், இந்தியாவின் தென்மாநிலங்கள் மற்றும் இலங்கை கல்லறைகளின் தொன்மையையும் ஆய்வு செய்தார்.
இலங்கை தமிழ் ஆய்வாளர்களான சண்முகதாஸ், மனோன்மணி ஆகியோருடன் இணைந்து ஆய்வு கட்டுரைகளை வெளியிட்ட இவர், தன் 88வது வயதில், 2008, ஜூலை 14ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
ஜவுளி சந்தை வர்த்தக இலக்கு 33.50 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஜவுளி துறை கமிஷனர் தகவல்
-
கொடிசியாவில் நாளை வரை 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி
-
ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'
-
சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு
-
மூன்றில் ஒரு கால்நடைக்கு அடர்தீவனம் கிடைக்கவில்லை 37 சதவிகிதம் பற்றாக்குறையால் புதிய சவால்
-
நாடு முழுதும் வீடு விலை 6 சதவீதம் உயர்வு