ஊதிய முரண்பாடு களைய ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோலியனுார் வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர்கள் செபாஸ்டின், சுரேஷ்பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.
செயலாளர் மேகநாதன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயானந்தம் போராட்ட விளக்கவுரை ஆற்றினார்.
நிர்வாகிகள் தியாகராஜன், கிருஷ்ணன், ஜான்பீட்டர், ஐன்ஸ்டீன், பாபு, ராஜவர்தன், சார்லஸ், ஜெய்சங்கர், மூர்த்தி, வளர்மதி, நிர்மலா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னாள் மாவட்ட மகளிரணி செயலாளர் மாதவி நன்றி கூறினார்.