காவிரி–வைகை–குண்டாறு இணைப்புதிட்டம்: ரூ.2000 கோடி ஒதுக்க கோரிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் உட்பட ஏழு மாவட்டங்கள் பயன் பெறும் காவிரி–வைகை–குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
காவிரி–வைகை– கிருதுமால்– குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமையில் விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனர்.
அதில், காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
எனவே நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் ரூ.2000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். –––