பீச் வாலிபால் போட்டி

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் பிரிவு பீச் வாலிபால் போட்டிகள் மதுரையில் நடந்தன.

14 வயது ஆடவர் பிரிவில் அமெரிக்கன் கல்லுாரிப் பள்ளியின் சிவ வர்ஷன், ஜெய் சரண், மாதேஸ்வரன் முதலிடம் பெற்றனர். அண்ணாமலையார் பள்ளி க்ரிஷ் சித்தார்த், க்ரிஷ், திஷாந்த் இரண்டாமிடம், சாப்டூர் அரசுப் பள்ளி சந்துருகன், திருக்குமரன், கார்த்திகேயன் மூன்றாமிடம் பெற்றனர்.

17 வயது பிரிவில் செயின்ட் பிரிட்டோ பள்ளி பவித்ரன், வெற்றிமாயன், கமலேஷ் முதலிடம் பெற்றனர். அமெரிக்கன் கல்லுாரிப் பள்ளி ஹரிதிலக், ஷியாம் தாஸ், பிரதீப் இரண்டாமிடம், செயின்ட் மைக்கேல் பள்ளி அண்ணாமலை, பிரசாத், யாசித் மூன்றாமிடம் பெற்றனர்.

19 வயது பிரிவில் அமெரிக்கன் கல்லுாரிப் பள்ளி மாரிசெல்வம், கிஷோர், சிவனேஷ் முதலிடம், சேதுபதி பள்ளி ஹரிஹரன், லிங்கேஷ், யோகேஸ்வரன் இரண்டாமிடம், வி.எச்.என்., பள்ளி விஷ்ணு, அர்ஜூன், பாலாஜி மூன்றாமிடம் பெற்றனர்.

14 வயது மகளிர் பிரிவில் அழகர்கோவில் ஏ.எம்.எஸ். பள்ளி கோமதி, சுகிதா, கமலபுஷ்பம் முதலிடம் பெற்றனர். செயின்ட் ஜோசப் பள்ளியின் ஸ்ருதிகா, காவ்யா, பிரியதர்ஷினி இரண்டாமிடம், புளியங்குளம் அரசுப் பள்ளி காவ்யா, ஷாலினி ஸ்ரீ, ஆதன்யா மூன்றாமிடம் பெற்றனர்.

17 வயது பிரிவில் அழகர்கோவில் ஏ.எம்.எஸ். பள்ளி அஸ்வதி ஸ்ரீ, வான்மதி, சுசீலா முதலிடம், அண்ணாமலையார் பள்ளி தேசிகா, ஸ்வாதி, காவ்யாஸ்ரீ இரண்டாமிடம், செயின்ட் ஜோசப் பள்ளி ரூபினி, யாஷிதா, லதிகா ஈஸ்வரி மூன்றாமிடம் பெற்றனர்.

19 வயது பிரிவில் அழகர்கோவில் ஏ.எம்.எஸ். பள்ளி துவாரகா, ராமலட்சுமி, கீர்த்திகா முதலிடம், ஓ.சி.பி.எம்., பள்ளி காசிகா, பிரதியுக்ஷா, முருகேஸ்வரி இரண்டாமிடம், செயின்ட் ஜோசப் பள்ளி காவ்யா, வாசுகி, சிவரேஷ்மா மூன்றாமிடம் பெற்றனர்.

Advertisement