சென்னைக்கு காரைக்காலில் ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., உட்பட இருவர் மீது வழக்கு
காரைக்கால்: காரைக்காலில் 15 லட்சம் ரூபாய் மோசடி புகாரில், திருநள்ளாறு முன்னாள் எம்.எல்.ஏ., சிவா மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு அம்பகரத்துார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம், 59; திருநள்ளாறு சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், திருநள்ளாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி திருநள்ளாறு முன்னாள் எம்.எல்.ஏ., சிவா கேட்டதன் பேரில், தனது நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து (ஆர்.டி.ஜி.எஸ்) மூலம் 15 லட்சம் ரூபாய் அனுப்பியதாகவும். பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி வழங்காத நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்., 4ம் தேதி சிவா வங்கி காசோலை கொடுத்தார்.
அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை. பின், சிவா தனது பங்குதாரர் வேலுார் சத்துவாசாரி, குறுக்கு தெருவை சேர்ந்த பரத்குமார் காந்தியை, முகமது நிஜாமிடம் அறிமுகப்படுத்தினார்.
பரத்குமார் காந்தி, பணத்தை தருவதாக முகமது நிஜாமை வேலுார் வாரும்படி கூறியுள்ளார். அவர், தனது நண்பர்களுடன் அங்கு சென்ற நிலையில், அவர், ரூ. 10 லட்சத்திற்கான மற்றொரு காசோலை வழங்கினார். அந்த காசோலையையும் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கில் செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., சிவா மற்றும் அவரது நண்பர் பரத்குமார் காந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று முன்தினம் முகமது நிஜாம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவா மற்றும் அவர் நண்பர் மீது மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ், இன்ஸ்பெக்டர் பிரவீன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
துக்காராம் முண்டேவைத் தொடர்ந்து ரோஷன் ஜேக்கப்; உ.பியில் உணவுக் கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை
-
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு; 23 பேர் காயம்
-
குரல் சொல்லும் குறள்; கழுதை காதல் காசு தரும்!
-
ரூ.1.81 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கும் தமிழக அரசு நிறுவனங்கள்
-
தனியார் நிறுவனத்தில் அத்துமீறியதாக த.வெ.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
-
பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி கொடுக்க முயன்றாரா பஞ்சாப் முதல்வரின் மனைவி?