பைக் மீது ஜே.சி.பி., மோதி விபத்து மருத்துவக்கல்லுாரி மாணவர் பலி
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே ஜே.சி.பி., வாகனம் மோதி பைக்கில் சென்ற மருத்துவக் கல்லுாரி மாணவர் இறந்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் அருண் பாலாஜி, 23; விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வந்தார்.
இவர், நேற்று மதியம் ஹீரோ பைக்கில் முண்டியம்பாக்கத்திலிருந்து, கள்ளக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றார்.
மாலை 5:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு புறவழிச்சாலையில் சென்ற போது, ஜே.சி.பி., அருண் பாலாஜி ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement