உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
கொழும்பு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு தொடரில் 1,000 ரன் விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இவர் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கொழும்பு மைதானத்தில் நேற்று துவங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேஎல் ராகுல் 18 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். (50) அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் நிதானமாக ஆடிய படிக்கல், இந்தப் போட்டியிலும் சதம் (117) அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்திருந்தது.
2வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், அறிமுக வீரர் சரணாஷ் ஜெயின் (6) ஏமாற்றம் அளித்தார். துருவ் ஜூரேல், பன்ட் இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 6 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்னை கடந்து இந்தியா விளையாடி வருகிறது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு தொடரில் 1,000 ரன் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை கில் (17 இன்னிங்ஸ்) படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2019-21 காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி, 24 இன்னிங்ஸில் விளையாடி 934 ரன் விளாசியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், கொழும்பு டெஸ்டில் 50 ரன் விளாசியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் 3,000 ரன் விளாசிய 4வது இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் கில் (26 வயது) பெற்றுள்ளார். சச்சின் 23 வயது 228 நாட்களில் இந்த சாதனையைப் படைத்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு