எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருகிறது என மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி: வழக்கு வேறு; சட்டசபை வேறு. சட்டசபையில் மானியக் கோரிக்கை போய் கொண்டு இருக்கிறது. மானியக் கோரிக்கையில் என்ன பண்ண வேண்டுமோ, அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். தேவையில்லாத வார்த்தைகளை அவர்கள் பேசும் போது தான், அதற்கான பதிலை நாம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கோபம் வருது
ஏதாவது விஷயங்களில் அவர்கள் தேவையில்லாத வார்த்தைகளை பேசும் போது, அதற்கான பதிலை கொடுக்க வேண்டியது இருக்கிறது. ஊழல்னு சொன்னா கோபம் வருது; மக்களுக்கு தெரியும்; Party Fundனு சொன்னா கோவம் வருது, கட்சி நிதி இல்லாமலா, இத்தனை வருடம் அரசு இருந்தது. கட்சி நிதி இல்லாமல் ஏதாவது ஒரு துறை இருந்ததா? கட்சி நிதி கொடுக்காமல் ஒரு டிரைவிங் லைசென்ஸ் வாங்கி இருக்கிறீர்களா? பிறப்புல இருந்து இறப்பு வர எந்த சர்டிபிகேட் வாங்கணும்னாலும் காசு கொடுக்காம வாங்க முடிஞ்சுதா.
விளக்கம் சொல்லுங்க
கடந்த 20 வருடமாக எத்தனை பேர் வீட்டிற்கு காசு கொடுக்காமல் அப்ரூவல் வாங்கி இருக்கிறீர்கள். அது தான் கட்சி நிதி; ஆனா இன்னைக்கு எல்லாமே மாறி இருக்கிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் வசூல் ஆகிறது என்றால் அது யாருக்கு உரிய பங்கு; மணலில் கொள்ளையடிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் வசூல் செய்த பணம் யாருக்கு போனது; கட்சி நிதி என்று சொன்னால் கோபம் வருகிறது. அதற்கான விளக்கத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
பழிவாங்கலா?
ஆதாரம் இல்லாமல் எந்த வழக்கையும் தொடுக்க முடியாது. தவறு இருந்தால் கண்டிப்பாக வழக்கு தொடுக்கப்படும். மக்களுடைய வரிப்பணம் வழக்கு தொடுக்காமல் இருக்க முடியுமா? எவ்வளவு விவகாரம் நீதிமன்றம் வரை சென்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று கேட்டு இருக்கிறது.
@quote@டிரான்ஸ்பார்மர் வழக்கு 3 வருடம் நிலுவையில் இருந்துள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேட்டு இருக்கிறது. வழக்கு எல்லாம் சும்மா போட முடியாது. இவர்களை பழிவாங்க வேண்டிய அவசியமே கிடையாது.quote
முதல்வருக்கோ, யாருக்கோ இவர்களை பழிவாங்கும் எண்ணம் கிடையாது. தேர்தலில் மக்களே இவர்களை பழிவாங்கிவிட்டார்கள். யார் என்று காட்டிவிட்டார்கள். தேர்தலுக்கு திமுக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. திமுக பாஜவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொகுதி மறுவரையறையை எதிர்த்து வாக்களிக்கிறோம் என்று இதுவரை திமுக ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பேட்டி கொடுக்க உங்க
நடிகனின் தவெக விஜய் கட்சியில் எவருமே இல்லையா?
இவனுங்க இந்த ஐந்து வருஷம் என்ன செய்ய போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது அவர்களுக்குமே தெரியாது.. ஆனா ஒரு நாள் விடாம ஒன்னு ஒண்ணுக்குமே திமுகவை குத்தம் சொல்லிட்டே பொழுதை ஓட்ட போகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.. தொடர்ந்து இப்படியே பேசி கொண்டிருந்தால் மாற்றம் வேண்டி வாக்களித்த மக்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவர்.. வேற எந்த மந்திரிக்கும் பேச தெரியல பேசும் ரெண்டு மந்திரிக்கும் தாங்கள் என்ன பேசுகிறோம் என்றே புரியல..
சிலருக்கு அவர்களின் ஜாதி குறித்து பேசினால் கோபம் வரும். அதுபோல் இந்த திருட்டு திமுக வினருக்கு ஊழல், கட்சிநிதி என்றால் கோபம் வரும். உண்மையைச் சொல்வதால்.
பத்து ரூபாயாவது அவர்களிடமிருந்து வசூலித்து அரசு கருவூலத்தில் சேர்த்திருந்தால் கிழிய பேசுவதில் அர்த்தமிருக்கிறது..
அது பரவாயில்ல அப்பு, உம்ம கட்சிகாரனுக்கு திரிஷான்னாலே கோபம் பொத்துகின்னு வருது.
பொழுது விடிந்து பொழுது போனால் இந்த முன்னாள் பாஜக இந்நாள் தவெக பெடல் வாயன் நான்கு கட்சி அமாவாசை வட நாட்டு சேட்டு அடகு கடை நிர்மல் குமார் என்பவனின் பேட்டிதான் சகிக்க முடியல... இவனோட மூஞ்சியையும் வாயையும் மூடி வேறு யாரையாவது செய்தி தொடர்பாளர்களா போடுங்க
தவெக அப்ரசின்டிகளா
இவர் இல்லாத கட்சிகளே கிடையாது. அதனால் தான் அனுபவம் பேசுகிறது.
அடுத்த கட்சி தயவில் ஆட்சி நடக்கும் போதே இவ்வளவு பேச்சு
இவர்களை தக்க வைக்க எவ்வளவு கொடுக்க படுகிறது என்று வருங்காலத்தில் தெரிய வரும்
வேற வேலயே
கிடையாதுமேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு