‘காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்குதளம் என்னவானது?’

கோவை: காந்திபுரத்தில் 2017ல், ரூ.148 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்பாலங்கள் கட்டப்பட்டாலும், முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

முதல்வருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் எழுதியுள்ள கடிதத்தில், ‘100 அடி ரோடு, பாரதியார் ரோடு பகுதியில் இரு இறங்குதளம் அமைக்க, சிறப்பு குழு செய்தது. 2020ல் ரூ.23 கோடியில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ஆறு ஆண்டாகியும் வேலை நடக்கவில்லை. 100 அடி ரோடு, சத்தி ரோடு, நஞ்சப்பா ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இப்பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதைக்கான நிலஅளவை  நடப்பதாக கூறுகின்றனர்.

அதற்கும், மேம்பாலத்தில் இறங்குதளம் அமைப்பதற்கும் தொடர்பில்லை. மாநில நெடுஞ்சாலை துறையினர் வேலையை துவங்க ஆர்வம் காட்டுவதில்லை.

இறங்குதளம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் இறங்குதளம் அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement