பெண்ணைத் தாக்கியவர் மீது வழக்கு
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி சுந்தரி, 36; கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான கமலக்கண்ணன் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ், 34; இருவரிடமும் தகராறு செய்து, சுந்தரியை தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் விஷணுராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சைக்கிள் மோதிய தகராறு: 4 பேர் மீது வழக்கு
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரஷீத், 45; மகன் ரிதாஅகமது, 13; இவர், வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அக்பர்அலி, 55; மீது உரசியுள்ளார். ஆத்திரமடைந்த அக்பர்அலி, ரிதாஅகமதுவை தாக்கினார். இதனயைறிந்த ரஷித், அக்பர் அலியிடம் தட்டிக்கேட்டார். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். புகாரின் பேரில், அக்பர்அலி,55, சாஹீர் உசேன், 50; ஆரிப்அலி, 25; அஷ்ரப்அலி, 24; ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வயிற்று வலி: விவசாயி தற்கொலை
மயிலம் அடுத்த பொன்னம்பூண்டியைச் சேர்ந்தவர் தனசேகரன் மகன் ராஜா, 35; விவசாயி. திருமணமாகாதவர். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர் கடந்த 21ம் தேதி மாலை பூச்சி மருந்தை குடித்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் மதியம் இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
விக்கிரவாண்டி அடுத்த தும்பூரைச் சேர்ந்தவர் ஆரியமாலா, 56; பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சந்திரசேகர், 40; சுபாஷ், 38; இவர்களுக்கு சொந்தமான வீட்டு மனையில் ஆரியமாலா 3 அடி சேர்த்து வீடு கட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆரியமாலா தாக்கப்பட்டார். புகாரின் பேரில், சந்திரசேகர், சுபாஷ் ஆகியோர் மீது கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் அப்துல் சுலைமான், 26; இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது சித்தியான அப்துல் ரசாக் மனைவி மும்தாஜ் பேகம் என்பவரிடம் கடந்த 20ம் தேதி சாப்பாடு போடுமாறு கேட்டுள்ளார். அப்போது, ஏற்பட்ட பிரச்னையில் மும்தாஜ் பேகம், ஹக்கீம், நர்ஷிதா ஆகியோர் அப்துல் சுலைமானை தாக்கினர். வளவனுார் போலீசார் மும்தாஜ் பேகம் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தம்பதியை தாக்கியவர் கைது
விழுப்புரம் அடுத்த வெண்மணியாத்துாரைச் சேர்ந்தவர் நவீன், 32; இவர். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவெற்றிவேல், 33; என்பவரிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பிக்கேட்டு கடந்த 18ம் தேதி ஜெயவெற்றிவேல், அவரது மனைவி மகேஸ்வரி, 32; ஆகியோர் சேர்ந்து நவீன் மற்றும் அவரது மனைவி ரோஜா, 31; ஆகியோரை தாக்கினர். காணை போலீசார் ஜெயவெற்றிவேல், மகேஸ்வரி மீது வழக்குப் பதிந்து ஜெயவெற்றிவேலை கைது செய்தனர்.
விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை
விழுப்புரம் அடுத்த வடவாம்பலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; குடிபழக்கமுடையவர். டூவீலர் மெக்கானிக். கடந்த 4ம் தேதி அதிக குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்து கடையில் மயங்கிக் கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு