மணக்குள விநாயகர் கோவிலில் பிராமண மரப்பினர்கள் உற்சவம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 66ம் ஆண்டு பிரம்மோற்சவத்தின் பிராமண மரப்பினர்களின் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் 66ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 18 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிரம்மோற்சவத்தின் 5 நாளான நேற்று பிராமண மரப்பினர்கள் உற்சவம் நடந்தது.
இதையொட்டி, காலை 11 மணிக்கு வேதபாராயண குழுவினரின் வேத பாராயணம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பிராமணர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை வேதராமன், ரமேஷ் மற்றும் பிராமண மரப்பினர்கள் செய்திருந்தனர். கோவிலில் திருப்பணி துவங்க உள்ளதால், சுவாமி புறப்பாடு இல்லாமல் உற்சவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு