மஹாராஷ்டிராவில் சட்டென மாறியது வானிலை: ஏரி அருகே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
கோண்டியா: மஹாராஷ்டிராவில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக ஏரி அருகே தரையிறக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவில் பண்டாரா மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நாக்பூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 4 பேர் பயணித்தனர். வானில் பறந்து கொண்டிருந்த போது, மோசமான வானிலை நிலவியது.
இதனால் சிறிது நேரம் வானிலே வட்டமடித்தது. அப்போதும் வானிலை சீராகவில்லை. இதையடுத்து, ஹெலிகாப்டரை தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிசாரி என்ற ஏரிக்கு அருகே உள்ள காலி நிலத்தில தரையிறக்கப்பட்டது.
1 மணிநேரம் கழித்து, வானிலை சீரடைந்தது. அதன் பின்னர் ஹெலிகாப்டர் மீண்டும் நாக்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து பேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி அபிஷேக் நாம்தாஸ், ஹெலிகாப்டரில் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு