மூத்த குடிமக்கள் நலவாழ்வு பல் மருத்துவ முகாம்

  புதுச்சேரி: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் பல் மருத்துவ முகாம் நடந்தது.  உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து, சாரதாம்பாள் நகரில் உள்ள செயின்ட்பேட்ரிக் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. சங்கத்தின் கவுர தலைவர் தேவநாதன், துணை தலைவர் நளினி ஆகியோர் வரவேற்றனர். 

மகாத்மாகாந்தி முதுநிலை பல் மருத்துவ அறிவியல் நிறுவன இணை பேராசிரியர் லெனின் மற்றும் மருத்துவ குழுவினர், பல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Advertisement