சவுடாம்பிகை அம்மனுக்கு 28ம் தேதி மகா அபிேஷகம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை வீரபத்திரசுவாமி கோவிலில் உள்ள சவுடாம்பிகை அம்மனுக்கு வரும் 28ம் தேதி மகா அபிேஷகம் நடக்கிறது.

கோவிலில் நடக்கும் பெருவிழாவையொட்டி, வரும் 27ம் தேதி மகா கணபதி ேஹாமம், மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. அதனை தொடர்ந்து, 28ம் தேதி காலை 6:00 மணிக்கு சவுடாம்பிகை அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கங்கை நீர் கொண்டு வந்து , மதியம் 12:30 மணிக்கு அம்மனுக்கு அலகு அபிேஷகம் நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு மகாஜோதி, சுவாமி வீதியுலா மற்றும் அமுது படையல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

Advertisement