விலை உயர்வு எதிரொலி: கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவு
புதுடில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், மத்திய அரசு தனது இருப்பில் உள்ள வெங்காயத்தை நேரடியாகச் சில்லறை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புக்கள் மூலம் இந்த விற்பனை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. நாசிக்கிலிருந்து டில்லி, சென்னை, கொச்சி மற்றும் குவஹாத்திக்கு இன்று முதல் மத்திய அரசு வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் ரயில்களை (கண்டா எக்ஸ்பிரஸ்) இயக்க உள்ளது. உயர்ந்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசு கடைசியாக 2024 அக்டோபரில் நாசிக்கிலிருந்து டில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு கண்டா எக்ஸ்பிரஸை இயக்கியது.
தரவுகளின்படி, டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை, ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.35 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆக உள்ளது. சென்னையில், கடந்த ஆண்டு ரூ.33 ஆக இருந்த வெங்காயம், தற்போது ரூ.58க்கு விற்கப்படுகிறது. கேரளா மற்றும் அசாமின் சில பகுதிகளிலும் வெங்காய விலை உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருக்கும் மஹாராஷ்டிராவில் காரிப் பருவ வெங்காய உற்பத்தியில் 5% முதல் 7% வரை சரிவு ஏற்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.
விவசாயிகள் கூட்டுறவு சங்கமும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் நடப்பு நிதியாண்டிற்காகக் கையிருப்புக்காக 1.2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்துள்ளன. முன்னதாக மே மாதத்தில், ஒரு குவிண்டால் வெங்காயத்தின் கொள்முதல் விலை ரூ.1,270 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது; கொள்முதலை விரைவுபடுத்துவதற்காகக் கடந்த வாரம் அந்த விலை ரூ.2,645 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம் மற்றும் சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்தினால் விலை குறையும்.
இது நேற்று இன்று நடப்பதல்ல பொதுவாகவே செப்டம்பர் தொடங்கி தீபாவளி வரை பண்டிகைக்காலம் என்பதால் வெங்காயத்தைப் பதுக்கி விலையேற்றி விற்பது தொடர்ந்து வருடா வருடம் நடக்குமாறு நிகழ்வே மத்திய மாநில அரசுகளுக்குத் தெரியாத ஒன்றல்ல பருவமழை தாமதம் குறைந்த விளைச்சல் என்பதெல்லாம் ஒவ்வொரு வருடமும் சொல்லப்படும் சாக்குபோக்குகளே இன்னும் இரண்டு மாதங்களில் தக்காளியும் விலையேறும் அதைப் பதுக்கி வைக்க முடியாத காரணத்தால் விளையும் தக்காளியை அழித்து விலையேற்றுவார்கள் அதீதமாக விளைவதனை மதிப்புக் கூட்டல் முறையில் வேறு பொருளாக மாற்ற, கெடாமல் சேமித்து வைக்க ஏற்ற குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்க எங்கு தேவையிருக்கிறதோ அந்த சந்தைக்கு எடுத்துச் செல்லத்தக்க வகையில் உற்பத்தியாளருக்கு வழிகாட்ட, குறைந்த கட்டணப் போக்குவரவுத்து என எதையுமே இத்தனை வருடங்களில் ஒருமுறையேனும் சிந்திக்காத அரசுகளின் போக்கே இந்த நிலைக்கு காரணம் மாறுபட்டுச் செயல்படுமென எதிர்பார்த்த தவெக அரசு கூட, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கார் செலவுப்படி வரும் காலத்தில் சின்ன வீடு கூட்டத்தரலாம் என என்றெண்ணும் போது இது குறித்துச் சிந்திக்க இயலாமற் போனது ஏன் நெல்லுக்கு சேமிப்புக் கிடங்கு கட்டவேண்டுமென்று திருமதி சௌமியா அன்புமணிக்கு தோன்றியது கூட கம்யுயூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு கூடத் தோன்றவில்லையே ஏன்கோவணம் கட்டிக்க ஒண்டு டெல்லியில் போய் நடனமாடிய விவசாய சங்கத் தலைவர்களும் கேட்கவில்லையே ஏன் இப்படி எத்தனையோ ஏன் இருக்கிறது யார் பதில் சொல்வார்கள் தினமலரை அரசியல்வியாதிகள் படித்தாலும் இந்த இணைய பதிவைப் படிக்க வாய்ப்பில்லையே இதனையும் செய்தித்தாளின் ஒரு பகுதியாக மாற்றலாம்மேலும்
-
பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம், பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
-
அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்
-
பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!
-
அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; ராகுலிடம் அனுமதி பெற்றாரா? என பாஜ விமர்சனம்
-
அதிக மழைப்பொழிவு எங்கே!